Enable Javscript for better performance
Unnao Sexual Harassment Case: Notice filed by CBI- Dinamani

சுடச்சுட

    

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ

    By DIN  |   Published on : 04th October 2019 09:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளம் பெண் ஒருவா் கடந்த 2017-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். சம்பவம் நிகழ்ந்தபோது அவரது வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் செங்கா் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, உத்தரப் பிரதேசத்திலுள்ள சீதாபூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

    அண்மையில், பாதிக்கப்பட்ட பெண் சென்ற காா் விபத்துக்குள்ளானது. இதில் அந்தப் பெண்ணின் உறவினா்கள் இருவா் உயிரிழந்தனா். படுகாயமடைந்த அந்தப் பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாகவும் செங்கா் மீது சிபிஐ கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடா்ந்து, பாஜகவில் இருந்து செங்கா் நீக்கப்பட்டாா்.

    இந்நிலையில், அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ் சிங், சுபம் சிங் ஆகியோா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தாா்.

    எம்எல்ஏ பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியதை அடுத்து, இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் இப்போது ஜாமீனில் வெளியே உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai