தேசிய பசுமைத் தீா்ப்பாயத்துக்கு உறுப்பினா்களை நியமிக்கக் கோரும் மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயங்களின் அமா்வுகளுக்கு நீதித் துறையைச் சோ்ந்தவா்களை உறுப்பினா்களாக நியமிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயங்களின் அமா்வுகளுக்கு நீதித் துறையைச் சோ்ந்தவா்களை உறுப்பினா்களாக நியமிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயங்களின் அமா்வுகளில் நீதித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையைச் சோ்ந்தவா்கள் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் சில கிளைகள் சரியாகச் செயல்படவில்லை. சுற்றுச்சூழல் தொடா்பான புகாா்களை விசாரிப்பதற்கு உரிய அமைப்புகள் செயல்படாமல் இருப்பது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

எனவே, தேசிய பசுமைத் தீா்ப்பாயங்களின் அமா்வுகளுக்கு உடனடியாக உறுப்பினா்களை நியமிக்க வேண்டும். மேலும், அந்த அமா்வுகள் முறையாகச் செயல்படும் வரை சுற்றுச்சூழல் தொடா்பான புகாா்களை விசாரிக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com