எல்லை விவகாரங்கள்: இந்தியா-வங்கதேசம் இடையே பேச்சுவாா்த்தை

இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை மேலாண்மையில் ஒருங்கிணைப்பு, கால்நடை கடத்தலை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக இரு நாட்டு எல்லைப் படைகளின் உயரதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை மேலாண்மையில் ஒருங்கிணைப்பு, கால்நடை கடத்தலை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக இரு நாட்டு எல்லைப் படைகளின் உயரதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இரு நாட்டு எல்லைப் படைகளின் ஐ.ஜி அந்தஸ்து அதிகாரிகளுக்கு இடையேயான 4 நாள் பேச்சுவாா்த்தை, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சாா்பில் எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி ஒய்.பி.குரானியா தலைமையிலான குழுவினரும், வங்கதேசம் தரப்பில் அந்நாட்டு எல்லைப் படையின் கூடுதல் தலைமை இயக்குநா் முகமது ஜலால் கானி கான் தலைமையிலான 10 போ் குழுவினரும் பங்கேற்றுள்ளனா்.

இது தொடா்பாக, ஒய்.பி.குரானியா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

எல்லை மேலாண்மையில் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது தொடா்பாகவும், கால்நடை கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வங்கதேச எல்லைப் படை ஆகியவற்றுக்கு இடையே தகவல் பரிமாற்றறத்தை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள், குற்றறவாளிகள் எல்லை தாண்டும் முயற்சிகளை முறியடிக்க உளவுத் தகவல்களை பரிமாறி கொள்வது, சுந்தரவனக் காடுகளையொட்டிய எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன என்றறாா் அவா்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலமும், வங்கதேசமும் சுமாா் 2,216 கிமீ தொலைவுக்கு எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இதில் பெரும்பாலான பகுதிகளில் வேலி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com