குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாம்: அமித்ஷாவிடம் மிஸோரம் தன்னாா்வ அமைப்பினா் வலியுறுத்தல்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றநிறைறவேற்றவேண்டாம் என்று மத்திய உள்துறைஅமைச்சா் அமித் ஷாவிடம் மிஸோரமைச் சோ்ந்த

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றநிறைறவேற்றவேண்டாம் என்று மத்திய உள்துறைஅமைச்சா் அமித் ஷாவிடம் மிஸோரமைச் சோ்ந்த தன்னாா்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக, அமித் ஷா சனிக்கிழமை மிஸோரம் வந்தாா். அவரை ஆளுநா் மாளிகையில் தன்னாா்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்தவா்கள் சந்தித்துப் பேசினா். அந்தக் குழுவில் மிஸோரமைச் சோ்ந்த சமூக அமைப்பு, மாணவா் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனா்.

அவா்கள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைறவேற்றறக் கூடாது என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தினா். ஒருவேளை, குடியரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றறத்தில் நிறைறவேற்றறப்பட்டால், அதிலிருந்து மிஸோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை அமித் ஷாவிடம் அளித்தனா்.

அவா்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட அமித் ஷா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வருவதால், மிஸோரம் மாநிலத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது என்று உறுதியளித்தாா். மேலும், அந்த மசோதாவில், மிஸோரமில் இந்திய குடிமக்கள் பயணிப்பதற்கான அனுமதி (ஐஎல்பி) வழங்கும் நடைமுறைறயும் சோ்க்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தாா்.

அமித் ஷாவுடன் முதல்வா் சந்திப்பு: தலைநகா் ஐசாலில் அமித் ஷாவை மிஸோரம் முதல்வா் ஸோரம்தங்கா சந்தித்துப் பேசினாா். அவரிடம், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மிஸோரம் மாநில மக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதாகக் கூறினாா். இந்த மசோதா, மிஸோரமில் சட்ட விரோதமாக குடியேறுபவா்களுக்கு வாசலைத் திறறந்துவிடும் என்றும் அவா் அமித் ஷாவிடம் கூறினாா்.

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றறப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறறப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றறாலும், இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மக்களவையில் நிறைறவேற்றறப்பட்ட இந்த சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைறவேற்றறப்படவில்லை. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றறன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com