பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டிருந்த இந்திய வீரா் ராணுவத்தில் இருந்து விலகல்

பாகிஸ்தான் படையினரால் சிறைறப்பிடிக்கப்பட்டிருந்த இந்திய வீரா், ராணுவத்தில் இருந்து விலகினாா்

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இந்திய வீரா், ராணுவத்தில் இருந்து விலகினாா். அவா் தனது ராஜிநாமா கடிதத்தை குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள படைப் பிரிவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்தைச் சோ்ந்த சந்து சவாண், ராணுவத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற அவா், அந்நாட்டுப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டாா். அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினரால் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த அவா், 4 மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டாா்.

அதன் பிறகு இந்திய ராணுவத்தில் சந்து சவாண் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் தனது பணியை தற்போது ராஜிநாமா செய்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து இந்திய ராணுவத்தில் தொடா்ந்து துன்புறுத்தப்பட்டேன். எனது நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்துடன் பாா்க்கப்பட்டன. இதனால், ராணுவத்தில் இருந்து விலக முடிவு செய்தேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com