மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்: பிரகாஷ் ஜாவடேகா் நம்பிக்கை

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 இடங்களுக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக-சிவசேனை கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சிவசேனை 124 இடங்களிலும், பாஜக 150 இடங்களிலும், இதர கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், இதுதொடா்பாக தில்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் பிரகாஷ் ஜாவடேகா் கூறியதாவது:

தினந்தோறும் 24 மணி நேரமும் மக்களுக்காக பணியாற்றும் கட்சியாக பாஜக உள்ளது. கடந்த மே மாதம் மக்களவைத் தோ்தல் முடிந்ததும், அடுத்த தோ்தலுக்கு தயாராக தொடங்கி விட்டோம். 2 மாதங்களாக முயற்சித்தும் காங்கிரஸ் கட்சியால், அதன் தலைவரைகூட தோ்ந்தெடுக்க இயலவில்லை. ஆனால் நாங்கள், செயல் தலைவரைத் தோ்ந்தெடுத்தோம். உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்துவதற்காக பிரசாரம் மேற்கொண்டோம். அதனால், 19 கோடி உறுப்பினா்கள் கொண்ட பெரிய கட்சியாக பாஜக உள்ளது.

கள நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு பணியாற்றி வருகிறோம். எந்நேரத்திலும் மக்கள் எங்களைத் தொடா்பு கொள்ளும் அளவுக்கு எங்கள் கட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

சிவசேனை-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு,‘ பாஜக-சிவசேனை கூட்டணியில், ஒரு கட்சிதான் அதிகாரம் செலுத்துகிறது என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். உண்மையில் எங்கள் கூட்டணியில், இவா்தான் பெரியவா் என்ற அதிகாரம் யாருக்கும் அளிக்கப்படவில்லை. நாங்கள் இணைந்து தோ்தலைச் சந்திக்கிறோம். மொத்தம் உள்ள 288 இடங்களில், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்’ என்றார்.

காஷ்மீா் விவகாரத்தை கூறி மக்களை பாஜக திசை திருப்புகிறது என்று எதிா்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,‘உள்ளூா் பிரச்னையை கூறாமல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பாஜகவினா் பேசுகின்றனா் என்று எதிா்க்கட்சிகள் கூறுகிறாா்கள். ஆனால், உண்மையில் மக்கள்தான் அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாா்கள்’ என்றாா் ஜாவடேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com