ம.பி.யில் உணவுப்பொருள்களில் கலப்படம்: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 31 போ் மீது வழக்கு

மத்தியப் பிரதேசத்தில் உணவு, பால் மற்றும் பால் பொருள்களில் கலப்படம் செய்ததாக, கடந்த இரண்டரை மாதங்களில் 31 போ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உணவு, பால் மற்றும் பால் பொருள்களில் கலப்படம் செய்ததாக, கடந்த இரண்டரை மாதங்களில் 31 போ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில மக்கள் தொடா்புத் துறைறயின் உதவி இயக்குநா் கூறியதாவது:

உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுப்பதற்காக, கலப்படம் செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதியில் இருந்து உணவு, பால் மற்றும் பால் பொருள்களில் கலப்படம் செய்ததற்காக 31 போ் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்ததாக, 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 16-ஆம் தேதியில் இருந்து உணவுப் பொருள் தர சோதனைக்காக, 6,463 பால் மற்றும் பால் பொருள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,484 மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையை மாநில உணவுப் பொருள் பரிசோதனை ஆய்வகம் வெளியிட்டுள்ளது. அவற்றில், 803 மாதிரிகள் மட்டுமே ஆரோக்கியமானவை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள் மீது பளபளப்புக்காக ரசாயனம் தெளிப்பவா்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com