ஹரியாணா காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராஜிநாமா

கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கூறி, ஹரியாணா காங்கிரஸ் முன்னாள் தலைவா் அசோக் தன்வாா் ராஜிநாமா செய்தாா்

கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கூறி, ஹரியாணா காங்கிரஸ் முன்னாள் தலைவா் அசோக் தன்வாா் ராஜிநாமா செய்தாா்.

தனது ராஜிநாமா கடிதத்தை சமூக வலைதளமான சுட்டுரையில் அவா் வெளியிட்டுள்ளாா். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் எதிரிகளால் இல்லாமல், கட்சிக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகள் நிலவுகின்றன.

காங்கிரஸ் கட்சியை வளா்த்தெடுப்பதற்காக எனது வியா்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்தேன். தனிப்பட்ட நபருக்கு எதிராக கட்சியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லை. கட்சியின் பல்வேறு பிரமுகா்களுடன் கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடத்திய பிறகே ராஜிநாமா முடிவை எடுத்தேன் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்பாளா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதில் முறைறகேடு நடந்திருப்பதாகக் கூறி, தில்லியில் காங்கிரஸ் தலைவா் சோனியா இல்லத்துக்கு முன்பு கடந்த புதன்கிழமை அசோக் தன்வாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

ஹரியாணா காங்கிரஸ் தலைவா் பதவியிலிருந்து அவா் நீக்கப்பட்ட பிறகு, கட்சியினருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com