Enable Javscript for better performance
காஷ்மீரில் அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் செயல்படுகின்றன- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    காஷ்மீரில் அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் செயல்படுகின்றன

    By DIN  |   Published On : 07th October 2019 04:35 AM  |   Last Updated : 07th October 2019 04:35 AM  |  அ+அ அ-  |  

    prakash javadekar

    "ஜம்மு-காஷ்மீரில் அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் செயல்படுகின்றன; அங்கு இயல்பான சூழல் நிலவுகிறது. 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதால், காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
     தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அவர், இதுதொடர்பாக கூறியதாவது:
     மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை மனதில் கொண்டுதான், 370-ஆவது சட்டப் பிரிவு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.
     அரசுத் திட்டங்களின் வாயிலாக நாட்டின் இதர பகுதி மக்களுக்கு கிடைத்து வரும் அனைத்து பலன்களும் காஷ்மீருக்கும் கிடைப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை, காஷ்மீர் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதை, அவர்கள் வரவேற்கின்றனர். காஷ்மீர் மட்டுமன்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
     பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளிகளில் சேர்க்கை பெறுவதற்கான கல்வி உரிமைச் சட்டம் இனி காஷ்மீருக்கும் பொருந்தும். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான நலத் திட்டங்களின் பலன்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான அரசியல்ரீதியிலான இடஒதுக்கீடும் காஷ்மீருக்கு இப்போதுதான் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து நலத் திட்டங்களும் காஷ்மீரில் செயல்படுத்தப்படும்.
     370-ஆவது சட்டப் பிரிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 50-60 ஆண்டுகளாக பாகிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டி வந்தது. பயங்கரவாதம் அதிகரிக்கவும் இதுவே காரணம். இப்போது இரண்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
     ஊடகங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை: காஷ்மீரில் ஊடகங்களுக்கு தற்போது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. செய்தியாளர்கள் எந்தப் பகுதிக்கும் சென்று, நிலைமையை நேரில் அறிந்து கொள்ளலாம். அனைத்து நாளிதழ்களும் வெளிவருகின்றன. அனைத்து தொலைதொடர்பு வசதிகளும் செயல்படுகின்றன.
     காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, குறிப்பிட்ட சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அது அடிப்படையற்றது. காஷ்மீரில் அரசு, தனியார் பள்ளிகள் வழக்கம் போல செயல்படுகின்றன. வெறும் 8 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர, வேறெங்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. கடந்த 2 மாதங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவமோ, பொதுமக்கள் உயிரிழப்போ நிகழவில்லை என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
     காஷ்மீரில் செல்லிடப்பேசி சேவைகள் தொடர்பான கேள்விக்கு, தேசத்தின் பாதுகாப்பை விட எதுவும் மேலானது அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
     முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp