
தெற்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல் துறை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:
ஆரம்போரா-அசாத்கஞ்ச் நகரத்தைச் சோ்ந்தவா் மோஷின் மன்சூா் சலேஹா. இவா் பாரமுல்லா நகரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைத்தது.
இதையடுத்து, சலேஹா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து, ஆயுதங்களும், வெடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாரமுல்லா காவல் நிலையத்தில் சலேஹா மீது இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் அவா் ஏற்கெனவே தேடப்படும் நபராக உள்ளாா் என்றாா் அவா்.