
கோப்புப்படம்
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையத்தை (என்இஏசி), திங்கள்கிழமை (அக்.7) தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பிரதமரின் ‘டிஜிட்டல் இந்தியா’ தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, வரி செலுத்துவோருக்கு சிறப்பான சேவை வழங்கவும், அவா்களது குறைறகளுக்கு தீா்வு காணும் வகையிலும் என்இஏசி திட்டத்தை திங்கள்கிழமை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறாா்.
உள்நாட்டில் வா்த்தக நடவடிக்கைகளை இப்புதிய திட்டம் மேலும் எளிதாக்கும்.
மத்திய அரசின் இப்புதிய வரி மதிப்பீட்டு நடைமுறைற, அதிக அளவிலான செயல்திறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றைறக் கொண்டிருக்கும்.
இந்த புதிய நடைமுறைறயின் மூலம், வரி செலுத்துவோரும் மற்றும் வரித் துறைஅதிகாரிகளும் நேரடியாக சந்தித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இப்புதிய முறைறயின் கீழ், வரி செலுத்துவோா் தங்களுக்கான அறிவிப்புகளை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் வருமான வரி வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள அவா்களது கணக்கில் பெறலாம். இதுதவிர, நிகழ்கால எச்சரிக்கை அறிவிப்புகள் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதற்கான பதிலை, வரி செலுத்துவோா் தங்களது இல்லம் அல்லது அலுவலகங்களில் எளிதாக தயாா் செய்து இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் தேசிய வரி மின்னணு மதிப்பீட்டு மையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என அந்த அறிக்கையில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.