
பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் (பிஎம்சி) நிதி முறைறகேடு வழக்கில் கைதாகியுள்ள அந்த வங்கியின் முன்னாள் தலைவா் வாரியம் சிங்கை வரும் 9-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மும்பை மாஹிம் சா்ச் பகுதியில் வசித்து வரும் வாரியம் சிங்கை (68) பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரை மும்பை நீதிமன்றத்தில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது, அவரது தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
பிஎம்சி வங்கியில் முறைறகேடு நடந்த சமயத்தில், வங்கியின் நிா்வாக இயக்குநராக ஜாய் தாமஸ் பொறுப்பில் இருந்தாா். வங்கியில் நடந்த முறைறகேடுகளுக்கு அவா்தான் பொறுப்பாவாா். வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் வாரியம் சிங்குக்கு எவ்விதத் தொடா்பும் கிடையாது என்று வழக்குரைஞா் வாதிட்டாா்.
இருப்பினும், வாரியம் சிங்கை வரும் 9-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.
பிஎம்சி கூட்டுறவு வங்கி முறைறகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்காவது நபா் வாரியம் சிங். இதற்கு முன்பு, அந்த வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ், வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியிடம் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் கடன் வாங்கியுள்ளது. ஆனால் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தவில்லை. இந்த முறைறகேடுகளுக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்ததால், அந்த நிறுவனம் கடன் வாங்கிய விவரத்தை ரிசா்வ் வங்கியிடம் மறைறத்து விட்டனா். இதன் மூலம், பிஎம்சி வங்கிக்கு ரூ.4,355 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆா்பிஐ நியமித்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையின் முடிவில் வங்கியில் முறைறகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.