ஹரியாணாவில் 75-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும்

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றால் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 75-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று
ஹரியாணாவில் 75-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும்

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான செயல்பாடு ஆகியவற்றால் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 75-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அனில் ஜெயின் கூறினார்.
 ஹரியாணா பாஜக பொதுச் செயலரான (பொறுப்பு) அவர், இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
 பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய மற்றும் மாநில விவகாரங்களில் பிரதானமாக கவனம் செலுத்தப்படும். கடந்த 5 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் போன்ற நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டது மாநில அரசுக்கான பெருமையாகும்.
 மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான செயல்பாடு, பிரதமர் மோடி, முதல்வர் மனோகர் லால் கட்டர் ஆகியோருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 75-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும்.
 பிரதமர் மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏழைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது. 2-ஆவது ஆட்சியில் முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற முக்கியமான பல முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
 மோடியின் தலைமையில் சர்வேதச சமூகத்தில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசம் செய்துகொண்டதில்லை. இதுவரை இல்லாத வகையில், மனோகர் லால் கட்டர் தலைமையிலான மாநில அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டுள்ளது.
 மாநிலத்தின் அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆண்-பெண் பிறப்பு விகிதம் போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்கு கட்டர் தலைமையிலான பாஜக அரசு தீர்வு கண்டுள்ளது. வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பாரபட்சம் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட்டுள்ளது.
 எதிர்க்கட்சிகளைப் பொருத்த வரையில் சட்டப்பேரவைத் தேர்தலில், ஜனநாயக் ஜனதா கட்சி இரட்டை இலக்க தொகுதிகளைக் கூட கைப்பற்றாது. இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக, சமீபத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அசோக் தன்வார் கூறியுள்ளார் என்றார் அனில் ஜெயின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com