விமானப்படை தினம்: மிக்-21 ரக போர் விமானத்தில் பறந்து சாகசம் செய்த அபிநந்தன்!

தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக போர் விமானத்தில் சாகசம் செய்தார். 
விங் கமாண்டர் அபிநந்தன்
விங் கமாண்டர் அபிநந்தன்

தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 ரக போர் விமானத்தில் பறந்து சாகசம் செய்தார். 

87-ஆவது தேசிய விமானப்படை தினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தேசப் பாதுகாப்பிலும், மீட்பு நடவடிக்கைகளின் போது துரிதமாக செயல்பட்டு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளில், விமானப்படையை சிறப்பிக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதௌரியா மற்றும் கப்பல்படை தளபதி கரம்பீர் சிங் என முப்படைத் தளபதிகளும், விமானப்படை தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினர்.

மேலும், தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி விமானப்படையில் பணியாற்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, மறைந்த விமானப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  தொடர்ந்து, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு, கண்கவர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முப்படைத் தளபதிகளும் பங்கேற்றனர். பாகிஸ்தானின் விமானத்தை வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் - 21 ரக போர் விமானத்தில் பறந்து சாகசம் செய்தார். 

முன்னதாக, பாகிஸ்தான் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை வீரர்கள் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை தாக்கி அழித்தார் அபிநந்தன். அப்போது எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் படையிடம் சிக்கி பின்னர் உலக நாடுகளின் வலியுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com