மும்பையில் உயிரிழந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை லட்சம் தெரியுமா?

மும்பையில் உயிரிழந்த பிச்சைக்காரர், பிராடிச்சந்த் பன்னரம்ஜி ஆசாத் (Biradichand Pannaramji Azad)குடிசையில் ரூ.1.75 சில்லரை காசுகளும் வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான வைப்புத் தொகையும் இருந்தது தெ
மும்பையில் உயிரிழந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் இருந்தது எத்தனை லட்சம் தெரியுமா?

மும்பையில் உயிரிழந்த பிச்சைக்காரர், பிராடிச்சந்த் பன்னரம்ஜி ஆசாத் (Biradichand Pannaramji Azad)குடிசையில் ரூ.1.75 சில்லரை காசுகளும் வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான வைப்புத் தொகையும் இருந்தது தெரிய வந்துள்ளது. 

மும்பையில் உள்ள மன்கர்ட்- கோவண்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையிலான ரயில்வே டிராக்கில் வயதான ஒருவர் ரயில் மோதி வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.

அவர் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார், அவர் யார் என்று விசாரித்தனர். அங்கிருந்தவர்கள், அவர் ஆசாத் என்றும் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுப்பவர் என்றும் தெரிவித்தனர். அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை, தனியாகவே ரயில்வே டிராக் அருகிலுள்ள குடிசையில் வசித்து வந்தார் என்று தெரிவித்தனர்.

ரயில்வே போலீசார், அவரது குடிசைக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு நான்கு பெரிய டப்பாக்கள் இருந்தன. அதில் சில்லரை காசுகளாக இருந்தன. அதை எண்ணியபோது ரூ.1.75 லட்சம் இருந்தது. பின்னர் தூரத்தில் இரும்பு பெட்டி ஒன்று இருந்தது. அதில் வங்கி பாஸ்புக், ரூ.8.77 லட்சத்துக்கான வங்கி வைப்புத் தொகைக்கான ரசீது, ஆதார், பான்கார்டு ஆகியவை இருந்தன.

வங்கி பாஸ்புக்கில் நாமினியாக அவர் மகன் சுகதேவ் பெயரும் ராஜஸ்தானில் உள்ள ராம்கர் முகவரியும் இருந்தது. இதையடுத்து சுகதேவை தொடர்புகொண்ட போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர். அவர் மும்பை வந்து உடலை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com