தீபாவளியின்போது பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம்: தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

இந்த தீபாவளியில் நாம் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
தீபாவளியின்போது பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம்: தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு


இந்த தீபாவளியில் நாம் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியைக் காண அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, 

"மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் சமயத்தில் விஜயதசமியன்று, உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. தண்ணீர், இந்தியாவின் வளங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும், உணவை வீண் செய்யக் கூடாது என்றும் நாம் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.

கடந்த 9 நாட்களாக நாம் துர்கையை வழிபட்டோம். இதை மேலும் முன்னெடுத்துச் சென்று நாம் அனைவரும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கி செயல்படுவோம். இந்த தீபாவளியில் நாம் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவோம். இது நமது லக்ஷ்மி வழிபாடாக இருக்கலாம். 

பண்டிகைகளுக்கான இடம்தான் இந்தியா. பல கலாசாரங்களைக் கொண்டுள்ளதால், இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் எப்போதும் ஒரு பண்டிகை கொண்டாடப்படும். அனைத்து பண்டிகைகளும் நமது சமுதாயத்தை ஒன்றிணைக்கிறது" என்றார். 

அதேசமயம் இன்று விமானப் படை தினம் என்பதால், "இந்திய விமானப் படையின் சேவை குறித்து பெருமை கொள்கிறேன்" என்றும் பிரதமர் மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com