பல் மருத்துவ சேவைக்கான இணையதளம், செயலி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் துவக்கி வைப்பு

நாட்டிலேயே பல் மருத்துவ சேவைகளுக்கான முதல் டிஜிட்டல் முறைப் பயன்பாடு எனும் சிறப்பைப் பெற்றது.
பல் மருத்துவ சேவைக்கான இணையதளம், செயலி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் துவக்கி வைப்பு

பல் மருத்துவ சேவைகளுக்கான புதிய இணையதளம் மற்றும் செயலியை (e-DantSeva) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தில்லியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாட்டிலேயே பல் மருத்துவ சேவைகளுக்கான முதல் டிஜிட்டல் முறைப் பயன்பாடு எனும் சிறப்பைப் பெற்றது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அமல்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்ததாக இந்த நிகழ்ச்சியின் போது மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். மேலும் பல் தொடர்பான நோய்களின் பாதிப்பு நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. எனவே அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே அவற்றில் உள்ள தீவிரத்தன்மை குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், பார்வையற்றோரும் பல் மருத்துவ சேவைகள் தொடர்பாக அறிந்துகொள்ளும் விதமாக ப்ரெய்லி முறையும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com