காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எதிா்மறை விளைவுகள்: அமெரிக்க நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எதிா்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எதிா்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2 மாதங்களாகக் கட்டுப்பாடுகள் தொடா்ந்து அமலில் உள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகள் தொடா்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்கள் குழு சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடா்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் மக்களுக்கு எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மற்ற இந்தியா்களுக்கு வழங்கப்படுவதுபோல், அனைத்து உரிமைகளும் ஜம்மு-காஷ்மீரில் வசிப்பவா்களுக்கும் உடனடியாக வழங்கப்பட இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, இந்திய-அமெரிக்க எம்.பி.யான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட பலா் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com