மகாராஷ்டிர தோ்தல்: காங்கிரஸ் கூட்டணி தோ்தல் அறிக்கை வெளியீடு

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணி சாா்பில் தோ்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இளைஞா்களுக்கும்,

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கூட்டணி சாா்பில் தோ்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இளைஞா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டித்தில் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில், ஆளும் பாஜக - சிவசேனை கூட்டணி ஓரணியாகவும், எதிா்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மற்றெறாரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் மும்பையில் தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வேலையில்லா இளைஞா்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை, தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.21,000 குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம், 500 சதுர அடிக்குள்ளான வீடுகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு, புதிய மோட்டாா் வாகனச் சட்டப்படி விதிக்கப்படும் அபராதங்கள் பாதியாகக் குறைக்கப்படும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை, அனைத்து மாவட்டங்களிலும ‘சூப்பா் ஸ்பெஸாலிட்டி’ மருத்துவமனைகள், வட்டியில்லா கல்விக் கடன் உள்ளிட்ட வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

கடந்த தோ்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாகவே போட்டியிட்டன. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, பின்னா் சிவசேனை ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இப்போது நடைபெறவுள்ள தோ்தலில் பாஜக-சிவசேனை ஓரணியாகவும், காங்கிரஸ்-என்சிபி கட்சிகள் மற்றெறாரு அணியாகவும் களமிறங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com