மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: 9 பொதுக் கூட்டங்களில் பேசுகிறாா் பிரதமா் மோடி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி 9 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, பாஜகவுக்கு ஆதரவு திரட்டவுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி 9 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, பாஜகவுக்கு ஆதரவு திரட்டவுள்ளாா்.

பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, 18 பொதுக் கூட்டங்களில் உரையாற்றவிருப்பதாக மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புணே நகரிலுள்ள கோத்ருட் தொகுதியில் களமிறங்கியுள்ள அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

புணே, சதாரா ஆகிய இடங்களில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள் வரும் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதேபோல், மகாராஷ்டிரத்தில் மேற்கு பகுதியில் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள பகுதி) அதிக கூட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கவிருக்கிறாா். புணேயில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், அப்பகுதியில் அடங்கியுள்ள 11 பேரவைத் தொகுதிகளின் வேட்பாளா்களும் பங்கேற்பாா்கள் என்றாா் பாட்டீல்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் வரும் 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், பாஜக - சிவசேனை கூட்டணி களமிறங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்பட தங்களது அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை முன்வைத்து, பிரசாரம் மேற்கொள்ள பாஜக வியூகம் வகுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com