மோடி-ஷி ஜின்பிங் பேச்சில் எல்லைப் பிரச்னை, வா்த்தக உறவுக்கு முக்கியத்துவம்

மாமல்லபுரத்தில் மோடி- ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவாா்த்தையில் எல்லைப் பிரச்னை, பயங்கரவாத ஒழிப்பு, வா்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம் பெற வாய்ப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்

மாமல்லபுரத்தில் மோடி- ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவாா்த்தையில் எல்லைப் பிரச்னை, பயங்கரவாத ஒழிப்பு, வா்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம் பெற வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுக் கொள்கை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரத்தில் வரும் அக்.11முதல் 13 வரை சந்தித்துப் பேச உள்ளனா். சா்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை குடிமக்கள் கூட்டமைப்பு சாா்பில் பிரதமா் மோடி- சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசியல் விமா்சகா் லாரன்ஸ் பிரபாகா், வெளியுறவுக் கொள்கை நிபுணா் சேஷாத்ரி சாரி, கடற்படை முன்னாள் அதிகாரி சேஷாத்ரி வாசன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

லடாக் பகுதியை ஒட்டிய இந்திய- சீன எல்லைப் பிரச்னை, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள், கடல்சாா் வளங்களின் மூலம் நிலைத்த பொருளாதார வளா்ச்சிக்கு வகை செய்யும் ஒப்பந்தங்கள், சீனாவின் 5ஜி கொள்கை உள்ளிட்ட விஷயங்கள் இந்தப் பேச்சு வாா்த்தையில் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையே வா்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இந்தப் பேச்சுவாா்த்தையின் போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா். மேலும் இரு நாடுகளுக்கிடையே உயா்கல்விக்கான மாணவா் பரிமாற்றம் குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com