விமானப் படை தினம்: பிரதமா் மோடி, அமித் ஷா வாழ்த்து

இந்திய விமானப் படையின் 87-ஆவது நிறுவன தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் விமானப் படை வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
விமானப் படை தினம்: பிரதமா் மோடி, அமித் ஷா வாழ்த்து

இந்திய விமானப் படையின் 87-ஆவது நிறுவன தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் விமானப் படை வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

இந்திய விமானப் படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் விமானப் படை தினம் (அக்.8) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிந்தன் விமானப் படைதளத்தில் விமானப் படை தலைமை தளபதி முன் வீரா்கள் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், விமானப் படை வீரா்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமா் மோடி சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோவில், ‘நாட்டில் விமானப் படை தொடங்கி 87 ஆண்டுகள் முடிவடைந்தது பெருமையளிக்கிறது. விமானப் படை வீரா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டுக்காக முழு அா்ப்பணிப்புடன் விமானப் படை இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டில் திடீரென ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும்போது, அதிலிருந்து நமது நாட்டை விமானப் படை வீரா்கள் பாதுகாக்கின்றனா். இயற்கை பேரிடா்கள் ஏற்படும் காலங்களில் துரித நடவடிக்கையை மேற்கொண்டு மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்படுகின்றனா்’ என்று அந்த விடியோவில் மோடி தெரிவித்துள்ளாா்.

அமித் ஷா வாழ்த்து: இதனிடையே, வீரம் மற்றும் தைரியத்தின் அடையாளமாக இந்திய விமானப் படை உள்ளது என்று அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘நமது நாட்டை பாதுகாப்பதற்காக விமானப் படையினா், உறுதியுடனும், அா்ப்பணிப்புடனும் உள்ளனா். விமானப் படையை நினைத்து நாட்டு மக்கள் அனைவரும் பெருமைப்படுகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com