தேர்தல் நேரத்தில் விடுமுறைக்குச் சென்றுள்ள ராகுல்: அமித் ஷா சாடல்!

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுமுறைக்குச் சென்றுள்ளதாக அமித் ஷா விமரிசித்துள்ளார். 
தேர்தல் நேரத்தில் விடுமுறைக்குச் சென்றுள்ள ராகுல்: அமித் ஷா சாடல்!


ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுமுறைக்குச் சென்றுள்ளதாக அமித் ஷா விமரிசித்துள்ளார். 

சண்டிகரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சியின் தேசியத் தலைவருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 

"இந்திய பாரம்பரியத்தின்படி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரான்ஸில் சாஸ்திர பூஜை செய்தார். இது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். விஜயதசமியன்று சாஸ்திர பூஜை செய்யப்படுவது வழக்கமில்லையா? எதை விமரிசிக்க வேண்டும், எதை விமரிசிக்கக் கூடாது என்பது குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் இதையும் தவறாகவே உணர்ந்துள்ளது. ரஃபேல் விஷயத்தில் பிரதமருக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 

ஹுஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியினால் அனைவரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பேரணியைக் கண்டு டொனால்ட் டிரம்பே ஆச்சரியமடைந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் ரண்தீப் சுர்ஜேவாலாவால் அதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

வெளிநாடுகளில் மன்மோகன் சிங்கின் இருப்பை யாரும் உணர்ந்ததில்லை. அவர் சோனியா காந்தி எழுதிக் கொடுக்கும் சில வரிகளைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில், ராகுல் காந்தி விடுமுறைக்குச் சென்றுள்ளார். 

சட்டப்பிரிவு 370 மற்றும் 35A முட்டுக்கட்டையாக இருந்ததால், ஜம்மு-காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் முழுமையாக ஒன்றிணையவில்லை என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருந்து வந்தது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது அரசியல் நடவடிக்கை அல்ல. அது தேசத்தின் பாதுகாப்பு சார்ந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதற்கு எதிராக வாக்களித்தது. சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com