கேரளா தொடர் கொலைகள்: மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி.. அதுவும்?

கூடத்தாயி தொடர் கொலை வழக்கில், கொலையாளி ஜோலி, மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி
லும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த ஜோலி


கோழிக்கோடு: கூடத்தாயி தொடர் கொலை வழக்கில், கொலையாளி ஜோலி, மேலும் பலரைக் கொல்ல திட்டமிட்டிருந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும், பொறாமை காரணமாக, பெண் குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களை அவர் குறிவைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கேரளாவையே உலுக்கியிருக்கும் கூடத்தாயி தொடர் கொலை வழக்கு விசாரணையை கண்காணித்து வரும் கோழிக்கோடு எஸ்பி கேஜி சிமோன், இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளில் சொத்து மற்றும் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் உறவினர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாமரசேரி கூடுதல் தாசில்தாரின் மகள் ஜெயஸ்ரீ மற்றும் தனது கணவரின் சகோதரி, ஒரு தொழிலதிபர் என அவரது கொலைப் பட்டியலில் இன்னும் சிலரின் பெயர்களும் இருக்கின்றன.

உணவில் சயனைடு விஷம் வைத்துக் கொள்வதுதான் ஜோலியின் வழக்கமான ஜோலி. அனைவரையுமே ஒரே முறையில் கொலை செய்திருக்கும் ஜோலி, இரண்டு பெண் குழந்தைகளையும் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்குக் காரணம், அவர்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இவரது சில கொலை முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. காரணம், இவரைப் பற்றி குடும்பத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்ததால், இவரிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்துள்ளதே காரணம் என்கிறார்கள்.

ஆனால் இவரது கொலைகளுக்கும், கொலை செய்யவிருந்த திட்டங்களுக்கும் என்ன நோக்கம் என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்புகின்றனர். அதில்லாமல், இவர் மீது சந்தேகம் எழுந்தும், யாருமே காவல்நிலையத்தில் புகார் கொடுக்காதது ஏன் என்பதும் கேள்வியாக தொக்கி நிற்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com