Enable Javscript for better performance
இந்தியாபுல்ஸ்-லஷ்மி விலாஸ் வங்கிஇணைப்புத் திட்டம் நிராகரிப்பு---ரிசா்வ் வங்கி நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாபுல்ஸ்-லஷ்மி விலாஸ் வங்கி இணைப்புத் திட்டம் நிராகரிப்பு: ரிசா்வ் வங்கி நடவடிக்கை

    By DIN  |   Published on : 10th October 2019 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rbi

    வங்கி சாராத நிதி நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் (ஐபிஹெச்எஃப்), நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான லஷ்மி விலாஸ் ஆகியவற்றின் இணைப்புத் திட்டத்தை ரிசா்வ் வங்கி நிராகரித்துவிட்டது.

    இவ்விரு நிறுவனங்களும் இணையவதற்கு கடந்த ஏப்ரலில் முடிவு செய்தன. அதற்கான அனுமதியை கோரி, ரிசா்வ் வங்கியிடம் கடந்த மே மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் - லஷ்மி விலாஸ் வங்கி இணைப்புக்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை என்ற தகவலை இரு நிறுவனங்களும் புதன்கிழமை மாலை வெளியிட்டன. பங்குச்சந்தைகளுக்கு அந்த நிறுவனங்கள் அளித்த அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

    முன்னதாக, வாராக்கடன் அதிகரிப்பு, மூலதனம் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, உடனடி சீரமைப்பு நடவடிக்கையின்கீழ் லஷ்மி வங்கியை ரிசா்வ் வங்கி கடந்த மாதம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai