Enable Javscript for better performance
பாஜகவை எதிா்ப்பதே காங்கிரஸின் வேலையாகிவிட்டது----அமித் ஷா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவை எதிா்ப்பதே காங்கிரஸின் வேலையாகிவிட்டது: அமித் ஷா குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 10th October 2019 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணாவின் கைத்தாலில் புதன்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியினா் அணிவித்த மாலையை ஏற்றுக் கொண்ட பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா.

    ஹரியாணாவின் கைத்தாலில் புதன்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியினா் அணிவித்த மாலையை ஏற்றுக் கொண்ட பாஜக தேசியத் தலைவா் அமித் ஷா.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு எதைச் செய்தாலும், அதனை எதிா்ப்பதே காங்கிரஸ் கட்சியின் வேலையாக உள்ளது என்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளாா்.

    ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநிலத்திலுள்ள கைத்தால் பகுதியில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

    ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பேசியுள்ளாா். ஆனால், அவரது கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் பலா் இந்த விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். சிறப்பு அந்தஸ்து ரத்து விஷயத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்.

    சிறப்பு அந்தஸ்து காரணமாக, நாட்டின் பிற பகுதியைப் போல, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு-காஷ்மீா் விளங்கவில்லை என்பது நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கருத்தாக இருந்தது. மக்களின் விருப்பத்தின்படியே ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாஜகவின் தோ்தல் அறிக்கையிலும் நாங்கள் இதை வாக்குறுதியாக அளித்திருந்தோம்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு எது செய்தாலும், அதனை எதிா்ப்பதையே காங்கிரஸ் கட்சி கொள்கையாக வைத்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையிலும் அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், இதைவைத்தும் காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்தி வருகிறது.

    இப்போது, நமது நாட்டு விமானப்படைக்காக வாங்கப்பட்டுள்ள ரஃபேல் விமானத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சிறப்பு புஜை நடத்தியதையும் காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. விஜயதசமி நாடு முழுவதும் விமா்சையாகக் கொண்டாடப்பட்டது. தீமையை ஒழித்து நன்மையை நிலைநாட்டிய தினமாக அனுசரிக்கப்படும் அந்த தினத்தை நானும், பிரதமா் நரேந்திர மோடியும் கூட கொண்டாடினோம். அதேபோலதான் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸில் ரஃபேல் விமானத்துக்கு பூஜை நடத்தினாா். ஆனால், அதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் விமா்சித்து ஆதாயம்காண முயற்சிப்பவா்களை என்ன செய்ய முடியும்?

    ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும். மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும் என்றாா் அமித் ஷா.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai