பொருளாதாரமாவது.. மந்தநிலையாவது.. விழாக்கால விற்பனையில் ரூ.19,000 கோடி அள்ளிய அமேசான், ஃபிலிப்கார்ட் 

இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும், அமேசானும், ஃபிலிப்கார்டும் கடந்த 6 நாட்களில் மட்டும் இணைய வர்த்தகம் மூலம் 19,000 கோடி அளவுக்கு பொருட்களை விற்றுக் குவித்துள்ளன.
Rs.19,000 கோடி அள்ளிய அமேசான், ஃபிலிப்கார்ட்
Rs.19,000 கோடி அள்ளிய அமேசான், ஃபிலிப்கார்ட்


புது தில்லி: இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும், அமேசானும், ஃபிலிப்கார்டும் கடந்த 6 நாட்களில் மட்டும் இணைய வர்த்தகம் மூலம் 19,000 கோடி அளவுக்கு பொருட்களை விற்றுக் குவித்துள்ளன.

செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபம் 4ம் தேதி வரையில் விழாக்காலச் சலுகைகளை அறிவித்து இணைய வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தன.

இந்த வர்த்தகப் போட்டியில் அமேசானும், ஃபிலிப்கார்ட்டும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து, ஏராளமான வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்ததாக பெங்களூருவில் இருந்து செயல்படும் ஆய்வு நிறுவனம் ரெட்சீர் கன்ஸல்டன்ஸி அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதம் முழுவதும் இணைய வர்த்தக நிறுவனங்கள் சுமார் 39 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்களை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் என்றும், இதில் பெரும் பகுதியை அமேசானும், ஃபிலிப்கார்டும் வைத்திருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாக்காலங்களில் இணைய வர்த்தக நிறுவனங்களில் விற்பனையாகும் பொருட்களின் அளவு ஆண்டுதோறும் 30% அளவுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிகம் விற்பனையாகும் பொருட்களில் செல்போன் எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செல்போன் வாங்குவதை தள்ளிப்போட்டு, விழாக்காலச் சலுகைக்காக காத்திருந்து வாங்குகிறார்கள்.

ஃபிலிப்கார்ட் நிறுவனத்தில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் செலுத்துவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. பொருளின் விலை, ஈஎம்ஐ வசதி, ஒவ்வொரு செல்போனையும் வாடிக்கையாளர்கள் தனித்துவத்துதோடு பார்க்கும் வகையில் இணைய வசதி, எந்த இடத்தில் இருந்தாலும் வாடிக்கையாளரை குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும் பொருள் என பல முக்கிய விஷயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது ஃபிலிப்கார்ட் என்று ரெட்சீர் குறிப்பிடுகிறது.

விற்பனையில் ஃபிலிக்கார்டுக்கு அடுத்த இடத்தில் அமேசான் விளங்குகிறது, அமேசானின் வாடிக்கையாளர்கள் அனைவருமே அதன் சேவையில் பூரண நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பதும் அதற்கு ஒரு சிறப்பம்சம்தான்.

விற்பனை குறித்து அமேசான்.இன் கூறுகையில், 99.4 சதவீத மின்னஞ்சல் எண்களில் இருந்து ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளன. 65,000 விற்பனையாளர்களுக்கு 500க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து வெறும் 5 நாட்களில் ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com