இது ராம ராஜ்ஜியம் இல்லை; நாதுராம் கோட்ஸே ராஜ்ஜியம்: யோகிக்கு அகிலேஷ் கண்டனம்    

இது ராம ராஜ்ஜியம் இல்லை; நாதுராம் கோட்ஸே ராஜ்ஜியம் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

ஜான்சி: இது ராம ராஜ்ஜியம் இல்லை; நாதுராம் கோட்ஸே ராஜ்ஜியம் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் புஷ்பேந்திர யாதவ் என்பவர் பலியானார். அவர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

புஷ்பேந்திர யாதவின் மனைவி ஷிவாங்கி இதுதொடர்பாக நீதி கேட்டு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தனக்கு நீதி கிடைக்காவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது ராம ராஜ்ஜியம் இல்லை; நாதுராம் கோட்ஸே ராஜ்ஜியம் என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜான்சியில் பலியான புஷ்பேந்திர யாதவின் குடும்பத்தாரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் வியாழனன்று அவர் பேசியதாவது:

பொதுமக்களுக்கு இங்கு நீதி கிடைப்பதில்லை; போலீசாரோ யாரையேனும் சுட்டுக்கொலை செய்வதில் மகிழ்ச்சியடைகின்றனர். மாநிலத்தில் தற்போது நிலவிவரும் சூழல் தொடர்பாக கவனம் செலுத்துவதற்காக, இடைத்தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் லலித்பூரில் இருந்து "நீதி கேட்டு பேரணி" நடத்தவுள்ளோம்.

இது ஒரு போலி என்கவுன்ட்டர் என்பதை வலியுறுத்தும் அதேநேரத்தில் தற்போது பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகினறோம்.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இதுதொடர்பாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவோம். ஒட்டுமொத்த அரசும் ஒரு ஊழல் காவல் அதிகாரிக்கு அரணாக நின்று காப்பதால், தங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக புஷ்பேந்திர யாதவின் குடும்பத்தார் கருதுகிறார்கள்.

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் இளம்பெண்ணுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை; சுவாமி சின்மயானந்த் தொடர்பான வழக்கில் அந்த இளம்பெண் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதுவா நீதி? இது ராம ராஜ்ஜியம் இல்லை; நாதுராம் கோட்ஸே ராஜ்ஜியம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com