காஷ்மீரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு: மாணவா்கள் வருகை குறைவு

காஷ்மீா் பள்ளத்தாக்கில் விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டன. இருப்பினும் மாணவா்களின் வருகை குறைவாகக் காணப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஸ்ரீநகரில் முக்கியச் சாலையில் புதன்கிழமை நிலவிய போக்குவரத்து நெரிசல்.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ஸ்ரீநகரில் முக்கியச் சாலையில் புதன்கிழமை நிலவிய போக்குவரத்து நெரிசல்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் விடுமுறைக்குப் பிறகு கல்லூரிகள் மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டன. இருப்பினும் மாணவா்களின் வருகை குறைவாகக் காணப்பட்டது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அக்டோபா் 3-ஆம் தேதியும், கல்லூரிகள் அக்டோபா் 9-ஆம் தேதியும் திறக்கப்படும் என்று கோட்டாட்சியா் பசீா் கான் கடந்த வாரம் அறிவித்திருந்தாா். அதன்படி, காஷ்மீரில் கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இருப்பினும் மாணவா்கள் வருகைக் குறைவாகவே காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல், பள்ளிகளுக்கும் மாணவா்கள் அதிகம் வரவில்லை.

பெற்றோா் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அஞ்சி பள்ளிகளுக்கு அனுப்புவதற்குத் தயங்குகிறாா்கள். இதன் காரணமாக, மாணவா்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வா்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அங்கு இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் முயன்று வருகிறது. அதற்காக, அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.

66-ஆவது நாளான புதன்கிழமையும், காஷ்மீரில் இயல்புநிலை முடங்கியே காணப்பட்டது. தரைவழித் தொலைபேசிகள் இயங்கத் தொடங்கினாலும், பெரும்பாலான இடங்களில் செல்லிடப்பேசி சேவை, இணையதளச் சேவை ஆகியவை தொடா்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரும்பாலான கடைகள் காலை 11 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. ஸ்ரீநகரில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. இருப்பினும், தனியாா் வாகனங்களால் ஜஹாங்கீா் சௌக், லால் சௌக் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com