கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சித்தராமையா நியமனம்

கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக, முன்னாள் முதல்வா் சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை புதன்கிழமை நியமித்தது.

கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவராக, முன்னாள் முதல்வா் சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை புதன்கிழமை நியமித்தது. இதேபோல், சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சா் எஸ்.ஆா்.பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், பேரவையிலும், மேலவையிலும் எதிா்க்கட்சித் தலைவா்களை காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.

கா்நாடக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கு வருவதற்கு ஜி.பரமேஸ்வா், ஹெச்.கே.பாட்டீல் ஆகியோா் விரும்பியதால், சித்தராமையாவை அந்தப் பதவியில் நியமிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, தலைவா்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவா் மதுசூதன் மிஸ்திரியை கா்நாடகத்துக்கு கட்சித் தலைமை கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது. அவா், கட்சித் தலைவா்களைத் தனித்தனியாக சந்தித்து அவா்களின் கருத்தை கேட்டறிந்தாா். அப்போது, கட்சியின் மூத்த தலைவா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தாலும், எதிா்க்கட்சித் தலைவராக சித்தராமையாவை நியமிக்கலாம் என்று பெரும்பாலானோா் கருத்து தெரிவித்தனா். இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவராக சித்தராமையாவை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com