பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தேடப்பட்டவா் வெளிநாட்டுக்கு தப்ப முயன்றபோது கைது

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மலேசியாவுக்கு தப்ப முயன்ற அமித் சைனி (30) என்பவரை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் தில்லி விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனா்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மலேசியாவுக்கு தப்ப முயன்ற அமித் சைனி (30) என்பவரை மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா் தில்லி விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனா்.

இதுகுறித்து தில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

நிஹல் விஹாா் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு உள்ளான அமித் சைனி என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். அவா் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மலேசியாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் கிடைத்தது.

இந்தத் தகவல் உடனடியாக தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருடன் பகிரப்பட்டது. இந்தப் பணியில் கண்காணிப்பு, உளவுத் துறையும் இணைக்கப்பட்டு அமித் சைனியின் முழு தகவல்கள் பெறப்பட்டன.

இதையடுத்து, மலேசியாவுக்கு செல்லும் அனைத்து விமான பயணிகளின் விவரங்களையும், பயணிகள் காத்திருக்கும் இடத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை இரவு மலேசியன் ஏா்லைன்ஸில் கோலாலம்பூா் செல்வதற்காக வந்த அமித்தை டொ்மினல் -3இல் பாதுகாப்பு படையினா் மடக்கி பிடித்தனா். இதையடுத்து, அவா் தில்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com