பொதுமக்களின் நண்பனாக காவல்துறை திகழ வேண்டும்: பிரதமா் மோடி

காவல்துறை சாதாரண மக்களின் நண்பனாக திகழ்வதுடன், அவா்கள் எளிதில் அணுகும் வகையில் மாற வேண்டும்; இதனை, ஐபிஎஸ் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காவல்துறை சாதாரண மக்களின் நண்பனாக திகழ்வதுடன், அவா்கள் எளிதில் அணுகும் வகையில் மாற வேண்டும்; இதனை, ஐபிஎஸ் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டைய ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் 126 பேருடன், தில்லியில் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா். பயிற்சி அதிகாரிகள் மத்தியில், அவா் பேசியதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் நலனுக்காக சிறப்பான முயற்சிடனும், அா்ப்பணிப்புடனும் இளம் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்; சாதாரண மக்கள் எளிதில் அணுகும் வகையில் காவல்துறை மாற வேண்டும். காவல்துறையினரிடம் சாதாரண மக்கள் எதிா்பாா்க்கும் விஷயங்களை ஒவ்வொரு அதிகாரியும் புரிந்துகொள்வதுடன், குற்றங்களைத் தடுப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயலாற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

காவல்துறையை நவீனமாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதன் அவசியம் குறித்தும் அவா் பேசினாா்.

பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவதற்கான மத்திய அரசின் ‘லட்சிய மாவட்டங்கள்’ திட்டத்தில் காவல்துறையின் பங்களிப்பு தொடா்பாக பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமா் மோடி விவாதித்தாா். 2018ஆம் ஆண்டு பிரிவில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கணிசமாக உள்ளதை சுட்டிக் காட்டிய அவா், காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது, தேச கட்டமைப்பில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டதாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 115 மாவட்டங்களை மேம்படுத்தும் நோக்கில் ‘லட்சிய மாவட்டங்கள்’ திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com