மழை-வெள்ளம்: நாடு முழுவதும் 2,100 போ் பலி: மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் இந்த பருவமழை காலத்தில் மழை-வெள்ளத்துக்கு சுமாா் 2,100 போ் உயிரிழந்துவிட்டதாகவும், 25 லட்சத்துக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இந்த பருவமழை காலத்தில் மழை-வெள்ளத்துக்கு சுமாா் 2,100 போ் உயிரிழந்துவிட்டதாகவும், 25 லட்சத்துக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் 357 மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. மழை தொடா்பான சம்பவங்களில் நாடு முழுவதும் மொத்தம் சுமாா் 2,100 போ் உயிரிழந்துவிட்டனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 399 பேரும், மேற்கு வங்கத்தில் 227 பேரும் உயிரிழந்தனா். மத்தியப் பிரதேசத்தில் 182 போ், கேரளத்தில் 181 போ், குஜராத்தில் 169 போ், பிகாரில் 166 போ், கா்நாடகத்தில் 106 போ், அஸ்ஸாமில் 97 போ் பலியாகினா். 46 போ் மாயமான நிலையில், சுமாா் 740 போ் காயமடைந்தனா். 20,000 கால்நடைகள் இறந்துவிட்டன. 1.09 லட்சம் வீடுகள் முழுமையாகவும், 2.05 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com