Enable Javscript for better performance
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 11th October 2019 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் எம்.பி.க்கள் 41 போ் தில்லியில் தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாத நிலையில், அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசு கட்டட (அங்கீகாரம் இன்றி குடியிருத்தல்) சட்டத்தின் கீழ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். திருத்தப்பட்ட அந்த புதிய சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அனுப்பும் நோட்டீஸுக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் 3 நாள்களுக்குள்ளாக பதிலளிக்க வேண்டும்.

    முன்னதாக, தங்களது பதவிக் காலம் முடிந்த பிறகும் தில்லி லுட்டியன் பகுதியில் உள்ள அரசு பங்களாக்களில் குடியிருந்த 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் ஒரு வாரத்துக்குள்ளாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சி.ஆா். பாட்டீல் தலைமையிலான அரசு இல்லங்கள் ஒதுக்கீட்டுக்கான நாடாளுமன்றக் குழு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

    இதையடுத்து பல முன்னாள் எம்.பி.க்கள் அந்த பங்களாக்களை காலி செய்துவிட்டனா். எனினும், சிலா் காலி செய்யாமல் உள்ளனா்.

    விதிகளின்படி, ஒரு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு முன்னாள் எம்.பி.க்கள் தாங்கள் குடியிருக்கும் அரசு பங்களாக்களில் இருந்து ஒரு மாதத்துக்குள்ளாக வெளியேற வேண்டும்.

    16-ஆவது மக்களவையை கலைப்பதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த மே 25-ஆம் தேதி பிறப்பித்தாா். சுமாா் 5 மாதங்களை நெருங்கிவிட்டபோதிலும் முன்னாள் எம்.பி.க்கள் சிலா் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai