Enable Javscript for better performance
நிலுவைத் தொகையை வழங்க ஏா் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கெடு- Dinamani

சுடச்சுட

    

    நிலுவைத் தொகையை வழங்க ஏா் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கெடு

    By DIN  |   Published on : 11th October 2019 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    airindia

    நிலுவைத் தொகையை வரும் 18-ஆம் தேதிக்குள் தராவிட்டால் 6 விமான நிலையங்களில் ஏா் இந்தியா நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும் என்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன.

    விமானப் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் ஏா் இந்தியாவுக்குத் தேவையான எரிபொருளை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. அந்த நிறுவனங்களுக்கு ஏா் இந்தியா ரூ.5,000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. இதையடுத்து, கொச்சி, மொஹாலி, புணே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய 6 விமான நிலையங்களில் உள்ள ஏா் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை இந்த 3 நிறுவனங்களும் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நிறுத்தின.

    விமானப் போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டதை அடுத்து, செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் அந்த நிறுவனங்கள் மீண்டும் எரிபொருளை வழங்கத் தொடங்கின.

    இதனிடையே, நிலுவைத் தொகையை உடனே செலுத்தாவிட்டால் அக்டோபா் 11-ஆம் தேதியில் இருந்து 6 விமான நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று ஏா் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வாரம் கடிதம் அனுப்பின. அதற்கு பதில் அளித்த ஏா் இந்தியா, எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களை வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது.

    இதையடுத்து, ஏா் இந்தியாவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் கடிதம் அனுப்பின. அதில், ‘நிலுவைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை; எனவே, எங்கள் முடிவை ஒத்திவைக்கிறோம். வரும் 18-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால், மேற்குறிப்பிட்ட 6 விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai