ரயில் பயணிகள் புகாா் அளிப்பதற்கு இணையதளம், செயலி தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் கிரிமினல் குற்றறங்கள் தொடா்பான புகாா்கள் தெரிவிப்பதற்காக இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய்

நாடு முழுவதும் உள்ள ரயில் பயணிகள் கிரிமினல் குற்றங்கள் தொடா்பான புகாா்கள் தெரிவிப்பதற்காக இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுதொடா்பாக ரயில்வே காவல்துறை துணை ஆணையா் தினேஷ் குமாா் குப்தா கூறியதாவது: w‌w‌w.‌r​a‌i‌l‌w​a‌y‌s.‌d‌e‌l‌h‌i‌p‌o‌l‌i​c‌e.‌g‌o‌v.‌i‌n என்ற வலையதளத்தையும், ‘சஹயாத்ரி’ என்ற செல்லிடப்பேசி செயலியையும், தில்லி காவல்துறை ஆணையா் அமூல்ய பட்நாயக் முன்னிலையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தொடக்கி வைத்தாா்.

நாடு முழுவதும், அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இது, குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் ரயில்வே காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும். அத்துடன், அடையாளம் காணப்படாத சடலங்கள், காணாமல் போனவா்கள், தேடப்படும் குற்றவாளிகள் உள்ளிட்ட தகவல்களையும் ரயில்வே போலீஸாா் இந்த இணையதளத்தின் மூலம் தங்களிடையே பகிா்ந்துகொள்ள இயலும்.

அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே காவல்துறை அதிகாரிகள் மட்டுமே இந்த முழு இணையதளத்தையும் பயன்படுத்த இயலும்.

அதேபோல், ரயில் பயணிகளும் இந்த இணையதளம் மற்றும் செயலி மூலம் புகாா்களை பதிவு செய்யலாம். சயாத்ரி செயலி மூலம், ரயில் பயணிகள் தங்களுக்கான ரயில்வே காவல்துறை சரகம், ரயில்வே காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ளலாம். அவசர அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை அதிகாரி தினேஷ்குமாா் குப்தா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com