காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் குடும்பத்துக்காக மட்டுமே உழைப்பார்கள்: அமித் ஷா

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடும்ப நலன்களுக்காக மட்டும்தான் உழைப்பார்கள் என்று அமித் ஷா விமரிசித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடும்ப நலன்களுக்காக மட்டும்தான் உழைப்பார்கள் என்று அமித் ஷா விமரிசித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 

"மகாராஷ்டிர மக்கள் தேர்வு செய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தங்களது குடும்ப நலன்களுக்காக பணிபுரிவார்கள். அதேசமயம், பாஜக மற்றும் சிவசேனா நாட்டு நலனுக்காக பணிபுரிவோம்.

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு, சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35A ஐ ரத்து செய்வதுதான் பிரதமர் மோடி எடுத்த முதல் முடிவு. இந்த விவகாரத்தை கையிலெடுக்க எந்தவொரு பிரதமருக்கும் தைரியம் கிடையாது. ஆனால், மோடி அதைச் செய்துள்ளார். இன்றைக்கு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகும்.

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தால் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இதனால், அவர் நாடாளுமன்றத்தில் இந்த முடிவுக்கு எதிராக வாக்களிக்கவும் செய்தார். ஆனால், அங்கு ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை. 

பாஜகவுக்கு வாக்கு வங்கி அரசியலைவிட, தேசத்தின் பாதுகாப்புதான் மிக முக்கியமானது. சட்டப்பிரிவு 370-க்கும், மகாராஷ்டிர அரசியலுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது ஏன்? காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டின் விருப்பமாகும். அதை மோடி நிறைவேற்றியுள்ளார்" என்றார்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com