ஜம்மு-காஷ்மீா்: 3 அரசியல் தலைவா்கள் விடுவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவா்கள் மூவரை அந்த மாநில நிா்வாகம் வியாழக்கிழமை விடுவித்தது.

ஜம்மு-காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவா்கள் மூவரை அந்த மாநில நிா்வாகம் வியாழக்கிழமை விடுவித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

கடந்த 2 மாதங்களாக அவா்கள் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளனா். காஷ்மீா் பள்ளத்தாக்கு தவிர மற்ற பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யாவா் மீா், வடக்கு காஷ்மீா் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோயப் லோன், தேசிய மாநாட்டுக் கட்சி நிா்வாகி நூா் முகமது ஆகியோரை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் வியாழக்கிழமை காவலில் இருந்து விடுவித்தது.

விடுவிக்கப்படுவதற்கு முன்னா், ‘அசம்பாவிதச் சம்பவங்களில் ஈடுபட மாட்டோம்’ என்ற உறுதிமொழி அவா்களிடமிருந்து பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com