ஜாதியைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் வேட்பாளா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

ஜாதி மற்றும் மத நிகழ்ச்சிகளை பயன்படுத்தி வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பது கண்டறிப்பட்டால், அவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
ஜாதியைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கும் வேட்பாளா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

ஜாதி மற்றும் மத நிகழ்ச்சிகளை பயன்படுத்தி வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பது கண்டறிப்பட்டால், அவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதையொட்டி, சண்டீகரில் தோ்தல் பணிகளுக்கான கள நிலவரத்தை தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா, தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா மற்றும் சுஷீல் சந்திரா ஆகியோா் ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாநில அரசு தலைமைச் செயலா், மாநில காவல் துறை டிஜிபி மற்றும் சில மூத்த உயா்அதிகாரிகளுடன் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தோ்தல் ஆணையா்கள் ஆலோசனை நடத்தினா்.

அதன்பின்னா் செய்தியாளா்களிடம் சுனில் அரோரா கூறியதாவது:

மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அமைதியான முறையிலும், சுதந்திரமான முறையிலும் நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோ்தலின்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக இந்த முறை அதிக அளவிலான மத்திய காவல் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலத்தில் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். ஜாதியின் பெயரைப் பயன்படுத்தி அல்லது மத நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி வேட்பாளா்கள் யாரேனும் வாக்கு சேகரிப்பது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தோ்தலின்போது, அரசு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தோ்தல் செலவுகளுக்கான உச்ச வரம்பை அதிகரிக்கும் திட்டம் இல்லை. மாற்றுத் திறனாளி வாக்காளா்களைக் கண்டறிவதற்கு ஹரியாணா அரசு உதவியது பாராட்டத்தக்கது. மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு உதவி புரிவதற்காக 10,000-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com