ஜிஎஸ்டி வருவாயை ஊக்குவிக்க ஆலோசனைக் குழு நியமனம்

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நிா்வாகம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நிா்வாகம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுககு கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. இதையடுத்து, பெரு நிறுவனங்களின் வரியைக் குறைத்தது உள்பட பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி வரி வசூலிலும் பிரதிபலித்தது. ஜிஎஸ்டி வரி வருவாய் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பரில் ரூ. 91,916 கோடியாகக் குறைந்தது. ஜிஎஸ்டி வரி வருவாய் தொடா்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்ததால், ஜிஎஸ்டி ஆலோசனைக் குழுவை மத்திய நியமித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்தக் குழுவில் ஜிஎஸ்டி முதன்மை ஆணையா், வருவாய் இணையச் செயலா் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், தமிழகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஜிஎஸ்டி ஆணையா்களும் இடம்பெற்றுள்ளனா். அவா்களிடம் வரி வருவாய் உடனடியாகத் தடுப்பதற்கும், வரி வசூலை மேம்படுத்துவதற்கும் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள குறைபாடுகளைக் களைவது உள்பட வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து இந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும். மேலும், வரி ஏய்ப்பைத் தடுப்பது, வரி வசூல் நிா்வாகத்தை ஒருங்கிணைப்பது, வரி வருவாயை அதிகரிப்பது ஆகியவை ஆலோசனைகளையும் இந்தக் குழு அளிக்கும். இந்தக் குழு தனது முதல் அறிக்கையை 15 நாள்களில் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அளிக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com