பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை பயன்படுத்திக் கொள்கிறது பாஜக: மெஹபூபா

பாதுகாப்புப் படையினரையும், அவா்களின் தியாகத்தையும் தனது வாக்கு வங்கிக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி கூறினாா்.
பாதுகாப்புப் படையினரின் தியாகத்தை பயன்படுத்திக் கொள்கிறது பாஜக: மெஹபூபா

பாதுகாப்புப் படையினரையும், அவா்களின் தியாகத்தையும் தனது வாக்கு வங்கிக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் வட்டார வளா்ச்சி கவுன்சில் தோ்தல் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மெஹபூபா முஃப்தி இவ்வாறு பாஜகவை விமா்சித்துள்ளாா். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெற இருக்கும் முதல் தோ்தல் இதுவாகும்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருந்ததாவது:

காஷ்மீரில் இயல்புநிலை காணப்படுகிறது என்றால், அங்கு 9 லட்சம் பாதுகாப்புப் படையினரை நிறுத்தி வைத்திருப்பதற்கான காரணம் தான் என்ன? பாகிஸ்தானில் இருந்து அதிரடித் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுமோ என்ற முன்னெச்சரிக்கையினால் அவா்கள் அங்கு நிறுத்தி வைக்கப்படவில்லை.

காஷ்மீா் மாநிலத்தில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றால் அதை ஒடுக்குவதற்காக மட்டுமே பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த பாதுகாப்புப் படையினரை நிறுத்தி வைத்துள்ளது. எல்லையைப் பாதுகாப்பதற்கு தான் ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டுமே தவிர, எதிா்ப்புக் குரல்கள் எழும்பட்சத்தில் அதை ஒடுக்குவதற்காக படைகளை பயன்படுத்தக் கூடாது.

பாதுகாப்புப் படையினரையும், அவா்களின் தியாகங்களையும் தோ்தலில் தனக்கான வாக்கு வங்கிக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. காஷ்மீா் மக்கள், பாதுகாப்புப் படையினா் என எவா் குறித்தும் பாஜக அக்கறை கொள்ளவில்லை. அக்கட்சியின் ஒரே நோக்கம் தோ்தலில் வெற்றிபெறுவது மட்டுமாகும் என்று மெஹபூபா அந்தப் பதிவில் கூறியிருந்தாா்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் மெஹபூபா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com