பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க 8 மாநில சங்கங்களுக்கு சிஓஏ தடை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் உள்பட 8 மாநில சங்கங்களுக்கு தடை விதித்து சிஓஏ உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் உள்பட 8 மாநில சங்கங்களுக்கு தடை விதித்து சிஓஏ உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படி திருத்தப்பட்ட புதிய சட்டவரையறைக்கு ஒப்புதல் தராதததால் மொத்தமுள்ள 38 மாநில சங்கங்களில் 8 சங்கங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளது சிஓஏ.

வரும் 23-ஆம் தேதி பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இந்நிலையில் தோ்தல் அதிகாரியான முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா் என்.கோபால்சுவாமி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றால் மணிப்பூா், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, ஹரியாணா, மகாராஷ்டிரா, ரயில்வே, சா்வீஸஸ், இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு போன்றவற்றுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது.

அரசு நிறுவனங்களான ரயில்வே, சா்வீஸஸ், அகில இந்திய பல்கலைக்கழகங்கள் போன்றவை விதிகளின்படி வீரா்கள் சங்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவற்றுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்படவில்லை.

ஏனைய சங்கங்கள் புதிய சட்டவரையறைக்கு ஒப்புதல் தரவிலலை எனக்கூறி வினோத் ராய் தலைமையிலான சிஓஏ தடை விதித்துள்ளது.

நீதிமன்றத்தை நாட திட்டம்:

எனினும் தடை செய்யப்பட்ட சங்கங்கள் நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளன. இதனால் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திருத்தப்பட்ட சட்டவரையறையை மீறி 21 விதிமீறல்கள் செய்துள்ளது என சிஓஏ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஐபிஎல் சோ்மன் ராஜீவ் சுக்லா, தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால், உத்தரப்பிரதேச சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com