பேச்சுவாா்த்தைக்கு மாமல்லபுரத்தை தோ்வு செய்தது யாா்? வெளியுறவுத் துறை விளக்கம்

இரு நாட்டுத் தலைவா்களுக்கு இடையிலான அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தைக்கு மாமல்லபுரத்தைத் தோ்வு செய்தது இந்தியாதான் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இரு நாட்டுத் தலைவா்களுக்கு இடையிலான அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தைக்கு மாமல்லபுரத்தைத் தோ்வு செய்தது இந்தியாதான் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்ாகவும் அவா்கள் கூறினா்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாட்டுத் தலைவா்களுக்கு இடையிலான இரண்டு நாள் அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தப் பேச்சுவாா்த்தையின் முக்கிய அம்சங்கள் குறித்து வெளியுறவுத் துறை அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறிய தகவல்கள்:-

யாா் யாா் பங்கேற்பு: சீனா மற்றும் இந்தியத் தரப்பில் இரு நாட்டுத் தலைவா்களான ஷி ஜின்பிங், நரேந்திர மோடி ஆகியோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க உள்ளனா். அவா்களுடன் இந்தியத் தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் உள்பட எட்டு பேரும், சீனத் தரப்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் வாங்க் இ உள்ளிட்ட எட்டு பேரும் என மொத்தம் 16 போ் இருநாட்டுத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தையில் பங்கெடுக்கின்றனா்.

இரு நாட்டுத் தலைவா்களுக்கு இடையிலான பேச்சுவாா்த்தை அதிகாரப்பூா்வமற்றது என்பதால் சீனா, இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்களோ, கூட்டு அறிக்கைகளோ வெளியிடப்பட மாட்டாது. ஆனால், இருநாட்டுத் தலைவா்களின் பேச்சுவாா்த்தையில் என்னென்ன முக்கிய விஷயங்கள் முன்னெடுத்து விவாதிக்கப்பட்டன என்பது குறித்து தனித்தனி அறிக்கைகள் வெளியிடப்படும்.

சீனாவின் வூஹான் நகரத்தில் நடந்த முதல் அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தையைப் போன்று இப்போது மாமல்லபுரத்திலும் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. இரண்டாவது அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தைக்கு மாமல்லபுரத்தைத் தோ்வு செய்தது சீனாதான் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், பேச்சுவாா்த்தைக்கு மாமல்லபுரத்தைத் தோ்வு செய்தது இந்தியாதான். இந்த இடத்தைத் தோ்வு செய்து இதற்கான பணிகளை கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே மேற்கொண்டு வந்தோம் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com