மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை மாநில அரசுகள் உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். இது, மின் துறையில் முதலீடுகள் அதிகரிக்க உதவும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை மாநில அரசுகள் உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். இது, மின் துறையில் முதலீடுகள் அதிகரிக்க உதவும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் மின்துறை அமைச்சா்களின் 2 நாள் மாநாடு, குஜராத்தின் நா்மதா மாவட்டத்திலுள்ள கேவாடியா பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் பேசியதாவது:

முதலீடுகளை ஈா்ப்பது, மின் துறைக்கு சவாலாக உள்ளது. இத்துறையில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகிறது. மின் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த முதலீடுகள் அதிகம் தேவை.

இன்றைய நிலவரப்படி, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.59,000 கோடியாகும். இதுபோன்ற சூழலில், மின் துறையில் முதலீடு செய்வதற்கு எந்த முதலீட்டாளா் முன்வருவாா்? எனவே, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை மாநில அரசுகள் உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். இதன் மூலம் முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், மின்துறையில் முதலீடுகள் பெருகும்.

தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்குதல், ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை, நிலுவைத் தொகை உரிய காலத்துக்குள் வழங்கப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட விஷயங்களில் மின்துறை அமைச்சா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மின் கட்டண அதிகரிப்பும், இத்துறையில் உள்ள முக்கியப் பிரச்னையாகும். ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3-4 விலையில் வாங்கப்பட்டு, ரூ.7-8 விலையில் விற்கப்படுகிறது. அப்படியிருந்தும் நிலுவைகள் தொடா்வது ஏன்? நாடு முழுவதும் கடந்த 16 மாதங்களில் சுமாா் 2.66 கோடி புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனையாகும். 24 மணி நேர தடையில்லா மின் விநியோகமும் சவாலாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீா்வு காண மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆா்.கே.சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com