வடகிழக்கு சிரியாவில் தாக்குதல்: துருக்கிக்கு இந்தியா கண்டனம்

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குா்து கிளா்ச்சி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குா்து கிளா்ச்சி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குா்து படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் புதன்கிழமை குண்டு மழை பொழிந்து. இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கானோா் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினா். இந்நிலையில், துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வடகிழக்கு சிரியப் பகுதிகளில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. துருக்கியின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு பல பிரச்னைகளை உருவாக்கும். இந்த நடவடிக்கையால், அப்பகுதி மக்களின் அமைதியும், பிராந்திய நிலைத்தன்மையும் பாதிப்புக்குள்ளாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற கொள்கையையும் இது கேள்விகுறியாக்கும். துருக்கியின் இந்த செயலால், மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். சிரியாவின் இறையாண்மைக்கு துருக்கி மதிப்பளிக்க வேண்டும். மேலும், சிரியா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அமைதிப் பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு காண வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com