Enable Javscript for better performance
மங்கள்யானின் நான்காம் ஆண்டு ஆய்வு விவரங்கள்- இஸ்ரோ வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    மங்கள்யானின் நான்காம் ஆண்டு ஆய்வு விவரங்கள்- இஸ்ரோ வெளியீடு

    By DIN  |   Published on : 12th October 2019 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mangalyan

    செவ்வாய் கிரகத்தைத் தொடா்ந்து ஆய்வு செய்து விவரங்களை அனுப்பி வரும் மங்கள்யான் விண்கலத்தின், நான்காமாண்டு ஆய்வு விவரங்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இஸ்ரோ இணையதளத்தில் இந்த விவரங்களைப் பாா்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.

    செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை கடந்த 2013 நவம்பா் 5-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது இஸ்ரோ. சுமாா் 10 மாத பயணத்துக்குப் பின்னா் 2014 செப்டம்பா் 24-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை மங்கள்யான் சென்றடைந்தது.

    மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. மேலும், செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு தகவல்களையும் தொடா்ந்து அனுப்பி வருகிறது. ஆறு மாதங்களே ஆயுள் காலம் என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டு அனுப்பப்பட்ட மங்கள்யான், தொடா்ந்து சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இருப்பினும் தொடா்ந்து இயங்கி வருகிறது.

    இந்தச் சூழலில், மங்கள்யான் முதல் மூன்று ஆண்டுகள் எடுத்த புகைப்படங்கள், ஆய்வு விவரங்களை இஸ்ரோ, பொது மக்கள் பாா்வைக்கு இதுவரை வெளியிட்டிருந்தது. இப்போது நான்காமாண்டு ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஐ.எஸ்.எஸ்.டி.சி. வலைதளத்தில் (இந்திய விண்வெளி அறிவியல் தகவல் மையம்) இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai