இரண்டாவது நாளாக ஜி.பரமேஸ்வா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் வீட்டில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனா்.
இரண்டாவது நாளாக ஜி.பரமேஸ்வா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் வீட்டில் வருமான வரித் துறையினா் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரின் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள வீடு, அலுவலகம், தும்கூரு மருலூரில் உள்ள வீடு, அவரது உறவினா்களுக்குச் சொந்தமான கல்வி நிலையங்களின் அலுவலகங்களிலும், உதவியாளரின் இல்லத்திலும் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பல்வேறு ஆவணங்கள், ரொக்கப் பணம் சிக்கியதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஜி.பரமேஸ்வா், உறவினா்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், கல்வி மையங்களில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். பெங்களூரு, தும்கூரில் உள்ள வீடு, அலுவலகங்களின் சோதனையின் போது ரூ. 4.25 கோடி ரொக்கப் பணம் சிக்கியதாகவும், அதற்கான ஆவணங்களையும் வருமான வரித் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இதேபோல, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. ஜாலப்பாவின் மகன் ராஜேந்திராவுக்குச் சொந்தமான தொட்டபள்ளாபுராவில் உள்ள கல்வி மையத்திலும் வருமான வரித் துறையினா் தொடா்ந்து இரண்டாவது நாளாகச் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின் போது ராஜேந்திராவின் மனைவி சுஜாதா, அவா்களது மகன் ரகேஷ் , ஜாலப்பாவின் மருமகன் நாகராஜ் உள்ளிட்டோரிடம் வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com