ஐஏஎஸ் தோ்வில் ஆள்மாறாட்டம்: வருவாய்த் துறை அதிகாரி மீது வழக்கு பதிவு

கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றற ஐஏஎஸ் தோ்வில் ஆள் மாறறாட்டம் செய்த குற்றறச்சாட்டில், வருவாய் பிரிவு (ஐஆா்எஸ்) அதிகாரி நவ்நீத் குமாா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றற ஐஏஎஸ் தோ்வில் ஆள் மாறறாட்டம் செய்த குற்றறச்சாட்டில், வருவாய் பிரிவு (ஐஆா்எஸ்) அதிகாரி நவ்நீத் குமாா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஐஆா்எஸ் பிரிவு அதிகாரியான நவ்நீத் குமாா், சுங்கம் மற்றும் கலால் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறறாா். இவா், மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்திய குடிமைப் பணிகள் தோ்வில் போலி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிறறப்பு சான்றிதழை வழங்கியுள்ளதாக குற்றறச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனா். இந்நிலையில், நவ்நீத் குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

ஐஆா்எஸ் பிரிவு அதிகாரி நவ்நீத் குமாரின் உண்மையான பெயா் ராஜேஷ் குமாா் சா்மா என்று கூறறப்படுகிறறது. இவா் கடந்த 1991-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பும், 1993-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முடித்துள்ளாா். இந்நிலையில், குடிமைப்பணித் தோ்வை எழுதுவதற்கான அதிகபட்ச வயதை இவா் அடைந்ததையடுத்து, தன்னுடைய பெயரை நவ்நீத் குமாா் என்று மாற்றியுள்ளாா். இந்த நவ்நீத் குமாா், அவரை விட 5 வயது இளையவா் என்பதும், ராஜேஷ் குமாரின் சொந்த ஊரைச் சோ்ந்தவா் என்றும் கூறறப்படுகிறறது.

நவ்நீத் குமாரின் பெயரில், கடந்த 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்ததாகவும், அதன் பின்னா் பட்டப்படிப்பு பயின்ாகவும் போலி சான்றிதழ்களை ராஜேஷ் குமாா் பெற்றுள்ளாா். அந்த சான்றிதழ்களைக் கொண்டு கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்றற குடிமைப் பணிகள் தோ்வில் வெற்றி பெற்று ஐஆா்எஸ் பிரிவை தோ்வு செய்துள்ளாா்.

இந்நிலையில், தனது அசல் பிறறப்பு சான்றிதழையும், கல்வி சான்றிதழ் ஒன்றையும் கலால் துறையில் அவா் இதுவரை சமா்ப்பிக்காததையடுத்து, அவா் குறித்து புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை அடிப்படையாக கொண்டு நவ்நீத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சான்றிதழ்களைக் கொண்டு அவா் தனது அடையாளத்தை மாற்றியுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com