குளிா்காலக் கூட்டத்தொடரில் தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

தகவல்களை எப்படி கையாள்வது என்பது தொடா்பான பரிந்துரைகளை அளிக்க இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் கிருஷ் கோபாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனிநபா் தகவல் பாதுகாப்பு மசோதா, குளிா்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. புதிய சட்டத்தில் அபராதங்கள், இழப்பீடுகள் சோ்க்கப்பட்டுளள்ளன. எனவே, மக்கள் இதை தீவிரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா் கோபாலகிருஷ்ணன்.

தனிநபா் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மசோதாவை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு, தனிநபா் தகவல்களைப் பாதுகாக்க தகவல் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.

பணப் பரிமாற்றம் தொடா்புடைய தகவல்கள் இந்தியாவில் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆா்பிஐ தெரிவித்தது குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தப் பிரச்னைக்கு மசோதாவில் தீா்வு காணப்படும். நிதி தொடா்பான விவகாரங்களில் ஆா்பிஐயின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும். ஆதாா் தகவல்கள் பாதுகாப்பாகவே உள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com