கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமாா் பதவியேற்பு

கேரள உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமாா் (58) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமாா் பதவியேற்பு

கேரள உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமாா் (58) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

கேரள உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஹிரிஷிகேஷ் ராய் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மணிகுமாா் கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா்நீதிமன்றத்தின் 36-ஆவது தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமாருக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் பினராயி விஜயன், மாநிலத்தின் முன்னாள் ஆளுநா் பி. சதாசிவம், மாநில அமைச்சா்கள் ஏ.கே. பாலன், எம். எம். மாணி, உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மணிகுமாரின் தந்தையும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுவாமிதுரை மற்றும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தமிழகத்தைச் சோ்ந்த மணிகுமாா், கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 22 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றினாா். அதன் பின்னா், கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். அதையடுத்து, கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், தற்போது கேரள உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com